மீண்டும் இலங்கை – இந்தியாவுக்கிடையில் விமான சேவை
srilanka
india
development
By Vasanth
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இடைநிறுத்தப்பட்டு இருந்த இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பல யோசனைகளை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவிரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான விமான சேவைகளை சுகாதார நெறிமுறைகளுடன் மீண்டும் ஆரம்பிக்கும் அதேவேளை ஏனைய சில நாடுகளுக்கும் விரைவில் விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி