நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : வெளியான முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் (India) நாகப்பட்டினத்துக்கும் - இலங்கையின் (Sri lanka) காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (26) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை கப்பல் சேவையை இயக்குவதற்கும் நவம்பர் மாதம் முழுவதும் சேவையை நிறுத்தி வைப்பதற்கும் கப்பல் நிறுவனம் முன்பு திட்டமிட்டிருந்தது.
வானிலை முன்னறிவிப்பு
இந்த நிலையில் பாதகமான வானிலை முன்னறிவிப்பைக் காரணம் காட்டி, ஒக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்ட பயணங்களை இரத்து செய்வதாக சுபம் படகு நிறுவனம் அறிவித்துள்ளது.

கப்பல் சேவை நிறுத்தப்படும் குறித்த காலப்பகுதியில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், படகின் இருக்கைகளின் அளவினை 150 இலிருந்து 186 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சுபம் படகு நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்