இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பில் வெளிவரும் தகவல்

Indian fishermen Ranil Wickremesinghe Sri Lanka India Sri Lanka Fisherman
By Dhilak Mar 19, 2024 03:21 PM GMT
Report

இந்திய இழுவைமடிப் படகு தொடர்பான பிரச்சினைக்கு இந்திய அரசாங்கத்துடன் பேசி தீர்வை எட்டுவதை விட்டு கடல் காவலர்கள் எனும் பெயரில் புதிய படையணியை உருவாக்குவது கடலில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியது அவசியம்.

மைத்திரியின் புதிய அரசியல் கூட்டணி! தேர்தலை முன்னிட்டு நகர்வு

மைத்திரியின் புதிய அரசியல் கூட்டணி! தேர்தலை முன்னிட்டு நகர்வு


தீர்வு

இந்தியாவின் துறைசார் அமைச்சுடன் பேசி ஈழத்து கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்வு காணப்பட வேண்டும்.

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பில் வெளிவரும் தகவல் | India Sri Lanka Fishermen Issue Talk To Gov India

அதனை விடுத்து கடல் காவலர்கள் என்றும் குடியியல் தன்னார்வ படையை உருவாக்கி தமிழக கடற்றொழிலாளர்களுடன் மோதவிடுவது ஆரோக்கியம் அல்ல.

இது இரு நாட்டு கடற்றொழிலாளர்களிடமும் முரண்பாட்டை ஏற்படுத்தும்.இலங்கை கடற்படையை நல்லவராக்கி இலங்கை கடற்றொழிலாளர்களை கெட்டவர்களாக காட்டும் எண்ணமோ என்ற ஐமிச்சம் காணப்படுகிறது.

அமைச்சரவை பத்திரம்

இவ்வாறு நடந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமிழக கடற்றொழிலாளர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பும். குறித்த பிரச்சினையை அதிபரும் அமைச்சரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பில் வெளிவரும் தகவல் | India Sri Lanka Fishermen Issue Talk To Gov India

இதை கடற்றொழிலாளர்களிடம் கையளித்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும், கடற்படை செய்யவேண்டிய வேலையை சிவில் அமைப்பிடம் வழங்கப்படுவதை நாம் விரும்பவில்லை.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தை மீளப்பெற வேண்டும்.

இந்த விடயத்தின் ஆழத்தை புரிந்து கடற்றொழிலாளர் சங்கங்கள் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர!

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி