கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்- இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்தான ஒப்பந்தம்!
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய நிறுவனத்தடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் மேற்கு கொள்கலன் முனையத்தின் 51% பங்குகள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையி்ல், 51% மேற்கு கொள்கலன் முனையம் அதானி குழுமத்துடனும், 34% ஜோன் கீல்ஸுடனும், 15% இலங்கை துறைமுக அதிகார சபையுடனும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது இந்திய சந்தைக்கு அனுப்பப்படும் சுமார் 40 சதவிகிதம் கொள்கலன் சரக்குகளை கையாளுகிறது.