யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இறுதி செய்யப்படவுள்ள ஒப்பந்தங்கள்
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்வதை விரைவுபடுத்துவதற்காக ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் இன்று (03) காலை அமைச்சின் வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழுவினர், பிரதிநிதி ஜனித ருவன் கொடிதுவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளி விவகார அமைச்சின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
கதிர்காமத்திற்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்தை தாக்கிய யானை: நேர்ந்த விபரீதம் - 25 பேர் வைத்தியசாலையில்!
போக்குவரத்து சேவை
இதன்போது, முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி பல விடயங்களில் உடன்பாடுகளை எட்டினர்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் செயலாக்கத்தை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒரு கூட்டு கண்காணிப்புக் குழுவையும் ஒரு தொழில்நுட்பக் குழுவையும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தை இந்திய அரசாங்கத்திடம் கூடிய விரைவில் சமர்ப்பித்து, இறுதி முடிவை உடனடியாகப் பெற இந்தியத் தூதுக்குழு ஒப்புக்கொண்டது.
அமைச்சர் அறிவுறுத்தல்
இத்திட்டம் இந்தியாவுக்கும் இலங்கையின் வட பகுதிக்கும் இடையிலான கடல்வழி இணைப்பை வலுப்படுத்தும், வட மாகாணத்தில் துறைமுக உட்கட்டமைப்பை மேம்படுத்தும், மற்றும் பிராந்தியப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இத்திட்டத்தால் வட மாகாண மக்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

2026 பெப்ரவரியில், காங்கேசன்துறை துறைமுகத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இத்திட்டத்தை கூடிய விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்திற்கும் அமைச்சர் அனுர கருணாதிலக அறிவுறுத்தினார்.
இதன்போது, குறுகிய காலத்திற்குள் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |