யாழ்.வடமராட்சியில் கரையொதுங்கிய தமிழக கடற்றொழிலாளர் படகு!

Indian fishermen Jaffna Tamil nadu Sri Lanka India
By Kalaimathy Dec 29, 2022 07:47 AM GMT
Report

தமிழகம் - நாகை மாவட்ட கடற்றொழிலாளர்களின் படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில், 4 கடற்றொழிலாளர்கள்  யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் கரையொதுங்கியவர்கள் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடற்றொழிலாளர்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,

மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை கடற்றொழிலாளர்களின் வலைகளை இலங்கை கடற்றொழிலாளர்கள் அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

வலையை மீட்கும் முயற்சி

யாழ்.வடமராட்சியில் கரையொதுங்கிய தமிழக கடற்றொழிலாளர் படகு! | India Tamil Nadu Fisher Man Boat Broke Down Jaffna

இந்நிலையில் அதனை மீட்பதற்காக தமிழகம் - நாகை கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களைப் பின்தொடர்ந்து வந்த நிலையில் படகு இயந்திரம் பழுதடைந்து வல்வெட்டித்துறை  ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 27ஆம் திகதி, மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டையை சேர்ந்த சரவணன், பாண்டியன் உள்ளிட்ட 4 கடற்றொழிலாளர்கள் பைவர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

இயந்திரம் பழுது

யாழ்.வடமராட்சியில் கரையொதுங்கிய தமிழக கடற்றொழிலாளர் படகு! | India Tamil Nadu Fisher Man Boat Broke Down Jaffna

இந்நிலையில் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்றொழிலாளர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என விரட்டி அடித்ததுடன் தமது வலைகளை அறுத்து எடுத்துச் சென்றதாகவும் தஞ்சமடைந்துள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை இலங்கை கடற்றொழிலாளர்கள் எடுத்துச் சென்ற நிலையில் அந்த வலைகளை தேடி யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிக்கு வந்தபோதே தமது படகில் உள்ள இயந்திரம் பழுதடைந்து இங்கு தஞ்சமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

திருப்பி அனுப்பும் நடவடிக்கை

யாழ்.வடமராட்சியில் கரையொதுங்கிய தமிழக கடற்றொழிலாளர் படகு! | India Tamil Nadu Fisher Man Boat Broke Down Jaffna

தஞ்சமடைந்த கடற்றொழிலாளர்களை மீட்ட வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மக்கள் அவர்களுக்கு உணவு வழங்கியதுடன் வல்வெட்டிதுறை காவல்துறையினருக்கும், சிறிலங்கா கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளதோடு, பாதுகாப்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சமடைந்த மீனவர்களை உடனடியாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு காவல்துறையினருடன் யாழ்.இந்திய துணை தூதரகம் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015