இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய வீரர்
இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வோர்னர் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் நாளை மறுதினம்(23) விசாகப்பட்டினத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடர் வரை டேவிட் வோர்னருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி
அத்துடன், பெட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வூட், மிட்செல் ஸ்டார்க், கெமரோன் கிறீன் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கும் இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த தொடருக்கு அவுஸ்திரேலிய அணிக்கு மெத்திவ் வேட் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |