இந்தியா - பாகிஸ்தான் : 2025 சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்ட நாடு இதுதான்..!
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான விரிசில் பாரிய போராக மாறும் தருவாயில் உள்ளது.
போர் ஒன்று உருவாகும் பட்சத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ பலம் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டு, இந்தியா உலக இராணுவ தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளதுடன், பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது.
இராணுவ வீரர்கள்
இந்தியாவின் செயல்பாட்டில் இராணுவ வீரர்கள் 1.46 மில்லியனும், இருப்பில் 1.15 மில்லியன் வீரர்களும் உள்ள நிலையில், பாகிஸ்தானின் இராணுவம் 654,000 வீரர்களுடன், 500,000 துணை வீரர்களையும் கொண்டுள்ளது.
அத்துடன், இந்தியா 2026 நிதியாண்டில் $79 பில்லியன் என்ற வலுவான பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை ஒதுக்கியுள்ளதுடன், பாகிஸ்தான் வெறும் $7.6 பில்லியன் மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இந்தியா 4,200க்கும் மேற்பட்ட யுத்த டாங்கிகளை வைத்திருப்பதுடன் அந்த அளவில் பாதியாக பாகிஸ்தான் 2,627 டாங்கிகளை வைத்துள்ளது.
கவச வாகனங்கள்
இதேவேளை, பாகிஸ்தானின் கவச வாகனங்களை விடவும் இந்தியா மூன்று மடங்கு கவச வாகனங்களை வைத்திருக்கின்ற நிலையில், அந்த எண்ணிக்கை 148,594 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா 2,229 இராணுவ விமானங்களை இயக்குகிறது, அதில் 513 போர் விமானங்கள் அடங்கும், பாகிஸ்தானிடம் 1,399 விமானங்களும், 328 போர் விமானங்களும் உள்ளன.
அத்தோடு, இந்தியா 899 உலங்குவானூர்திகளை கொண்டுள்ளதுடன், 6 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் உள்ளன, இதேவேளை, பாகிஸ்தானிடம் 373 உலங்குவானூர்திகளும் 4 எரிபொருள் நிரப்பும் விமானங்களும் உள்ளன.
அக்னி-V ஏவுகணை
இந்தியாவின் கடற்படையில் 293 கப்பல்களும், 2 விமானம் தாங்கிக் கப்பல்களும், 18 நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.பாகிஸ்தானின் கடற்படையில் 121 கப்பல்களும், 8 நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.
அத்துடன், இந்தியா 5,200 கி.மீ. சென்று துல்லியமாக தாக்கக் கூடிய அக்னி-V போன்ற ஏவுகணைகளை வைத்துள்ளதுடன், அக்னி-VI மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது.
இதேவளை, பாகிஸ்தான் சுமார் 2,750 கி.மீ. சென்று தாக்கக்கூடிய ஷாஹீன்-III ஏவுகணையை வைத்திருப்பதுடன், சீனா மற்றும் பெலாரஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் மேலும் அதன் வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் 24 மில்லியன் இளைஞர்கள் ராணுவ வயதை அடைகிறார்கள், இது அதன் ஆட்சேர்ப்பு திறனை வலுப்படுத்துவதுடன், அதன் 2.5 மில்லியன் துணை ராணுவம் உள்நாட்டு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்த்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
