இலங்கைக்கு இந்திய இராணுவத் தளபதி விஜயம்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வந்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று (06) இரவு அவர் நாட்டிற்கு வந்தடைந்தார்.
இதன்போது அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பல மூத்த இராணுவ மற்றும் சிவில் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
கலந்துரையாடல்கள்
பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.
அஞ்சலி
மேலும், புத்தல இராணுவக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களையும் சந்திக்க உள்ளார்.

அத்துடன், கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவுச்சின்னத்தில் இந்திய இராணுவத் தளபதி அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |