இந்தியாவின் இடத்தை தட்டித் தூக்கிய பாகிஸ்தான்! பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் பாகிஸ்தான் முன்னேற்றம்
சர்வதேச சந்தையில் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியின் கொள்வனவு எழுச்சி அடையத்தொடங்கியதன் காரணமாக, இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அதிக அளவில் பாஸ்மதி அரிசியினை ஏற்றுமதி செய்து சர்வதேச சந்தையில் இந்தியா பெரும் சாதனையை எட்டி இருந்தது, விளைச்சல் குறைந்ததன் காரணமாக பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது இதன் காரணமாகவும் ஏனைய சில காரணங்களின் விளைவாலும் இந்த ஆண்டு (2024) சர்வதேச சந்தையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் பெரும் போட்டியாளரான பாகிஸ்தான் எழுச்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்
ஈரான், ஈராக், ஏமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு, மண்ணின் மணம் வீசும் பாஸ்மதி அரிசியை இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டியிட்டு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 2023-ம் ஆண்டில் 4.9 மில்லியன் மெட்ரிக் தொன்னாக உயர்ந்தது. இதன் மூலம் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக கடந்த ஆண்டில் 5.4 பில்லியன் டொலர்களை குவிக்க உதவியது, இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 21% அதிகமாகும்.
இந்த ஆண்டு, பாகிஸ்தானில் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, இந்தியாவை விட குறைந்த விலையை வழங்கியதன் மூலம், பாஸ்மதி அரிசி சந்தையில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு சவாலாக உருவாகியுள்ளது, பாகிஸ்தானின் மொத்த அரிசி ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 5 மில்லியன் தொன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 3.7 மில்லியன் தொன்னாக இருந்தது.
அரிசி ஏற்றுமதி
மேலும், பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிந்ததும், பாகிஸ்தானின் ஏற்றுமதியை மிகவும் போட்டித்தன்மையுடன் ஆக்கியுள்ளது.
இந்திய பாஸ்மதி அரிசியை அதிகம் வாங்கும் நாடான ஈரான், கடந்த ஆண்டின் கொள்முதலை 36% ஆக குறைத்துள்ளது. அதே வேளையில் ஈராக், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யப்பட்டதால், இந்திய பாஸ்மதி முன்னிலை பிடித்தது.
இதனிடையே இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பாஸ்மதி அரிசி ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது, செங்கடல் வழி கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளால், அதிகரித்த சரக்கு செலவுகள் காரணமாவும், வரும் மாதங்களில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மேலும் குறையக்கூடும் என்பதும் இந்திய ஏற்றுமதியாளர்களை கவலையில் ஆழ்த்யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |