கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்திய தம்பதியினர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் குஷ் போதைப்பொருளை கொண்டு வந்த இந்திய தம்பதியினர் (indian couple) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் திருமணமான தம்பதிகள் எனவும் கணவருக்கு 32 வயது. மனைவிக்கு 29 வயது எனவும் தெரியவந்துள்ளது.
துபாய்க்கும் (dubai) இந்தியாவுக்கும் (india) இடையிலான வணிக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாய்களை தவறாக வழி நடத்திய தம்பதி
இந்த 2.400 கிலோ "குஷ்" போதைப்பொருளை பொலித்தீன் தாள்களில் அதன் வாசனை வெளியே பரவாத வகையில் மரப் பெட்டிகளில் அடைத்து, துணியால் மூடி, அதன் மீது கற்பூரப் பொடியைப் பூசி போதைப்பொருளைக் கண்டுபிடிக்கும் நாய்களைத் தவறாக வழிநடத்தியுள்ளனர்.
மேலும், இந்த போதைப்பொருள் பொட்டலங்கள் அவர்கள் கொண்டு வந்த இரண்டு சூட்கேஸ்களின் இருபுறமும் கம் பயன்படுத்தி கவனமாக ஒட்டப்பட்டு, பின்னர் மீண்டும் ஒன்றாக ஆணியடிக்கப்பட்டதால், சூட்கேஸ்களில் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தாய்லாந்திலிருந்து வருகை
இந்த இருவரும் நேற்று(03/17 ) இரவு 11.10 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த போதைப்பொருளைகொண்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருளையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்