கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவை : எடுக்கப்பட்ட நடவடிக்கை
Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lanka
By Sathangani
கட்டுநாயக்க விமான நிலைய (BIA) வளாகத்தில் துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மில்லி மீற்றர் நீளமுடைய ரவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாக்குமூலம் பதிவு
இந்தநிலையில், தோட்டாவை அவதானித்த தரை உதவி பணிப்பெண்ணிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி