மீண்டும் இந்திய முட்டைகள் இறக்குமதி - பச்சைக்கொடி காட்டிய ரணில்
அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பான தீர்மானத்திற்கு நேற்றையதினம் ( 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டது.
அதன்படி, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட 3 இந்திய நிறுவனங்களிடமிருந்து இலங்கை அரசாங்கம் மேற்கோள்களை அழைத்துள்ளது.
முட்டைகள் இறக்குமதி

விலை விபரங்களின் அடிப்படையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் கொள்முதல் குழுவின் பரிந்துரையை கருத்திற் கொண்டு, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை முன்னர் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 15 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்