மக்களவை தேர்தல் 2024: முன்னிலையில் கங்கனா!
இந்திய மக்களவை தேர்தலின் வாக்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்(kangana ranaut )73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தனது வெற்றி உறுதியானதால், கங்கனா தனது அம்மாவிடம் ஆசி பெற்றுக்கொண்டுள்ள புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இமாச்சல் பிரதேசத்தில் 4 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்ற நிலையில், மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் வெற்றிக்கு மிக அருகிலுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னிலையில் கங்கனா
அதாவது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை விட 73,625 வாக்குகள் முன்னிலையிலுள்ளார்.
ஹமிர்பூரில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், 1,71,348 தொகுதிகள் முன்னிலையிலுள்ளார்.
காங்ராவில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராஜிவ் பர்த்வாஜ் 2,45,987 வாக்குகள் முன்னிலையிலும் ஷிம்லாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் காஷ்யப் 89,660 வாக்குகள் முன்னிலையிலும் உள்ளதாகத் தேர்தல் ஆணையகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |