மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு
மன்னார் (Mannar) கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்றிரவு (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
32 பேர் கைது
தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த குறித்த கடற்றொழிலாளர்கள் அவர்களின் அதிநவீன தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 கடற்றொழிலாளர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்