யாழ் கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் : கவலை வெளியிட்டுள்ள நாமல்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் தமிழ்நாட்டின் சில கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‘எமது கடற்றொழிலாளர்களில் ஒருவரை தமிழ்நாட்டை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் மிகவும் கவலைக்குரியது.
நாமல் வெளியிட்ட பதிவு
இத்தகைய வன்முறைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை. அரசு உடனடியாக தலையிட்டு, அவரின் உடனடி பாதுகாப்பை உறுதி செய்து, அவர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்கு திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.
Disturbing scenes of an our fisherman being brutally assaulted by fishermen from Tamil Nadu is deeply alarming. Such acts of violence are unacceptable. I strongly urge the government to intervene without delay, ensure his immediate safety, and take all necessary steps to secure… pic.twitter.com/lhBSzVVWRb
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 28, 2026
இந்தச் சம்பவம், வட மாகாணத்தைச் சேர்ந்த எங்கள் கடற்றொழிலாளர்களை பாதுகாக்க வலுவான எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதில் திறமையாக இருந்தாலும், தமிழ்நாடு நிலப்பரப்பில், அதுவும் அங்குள்ள காவல்துறையினரின் முன்னிலையில் எங்கள் கடற்றொழிலாளர்கள் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது கவலைக்குரியது” எனப் பதிவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |