யாழ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் குழறுபடி : வாக்குவாதம் வலுத்ததால் பரபரப்பு
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (28) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கலந்துரையாடல்களில் ஈடுபட்ட போதே இந்த வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலேயே இந்தத் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குற்றம் சாட்டினர்
இதன்போது ஒரு கட்டத்தில் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்த நபர் தீடீரென கூட்டத்திற்கு நடுவே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதன்போது, அமைச்சர் கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
சிறிலங்காவின் நீதித்துறை செயல்படும் விதம் சந்தேககமளிக்கிறது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இருந்தபோதிலும், அமைச்சர் குறித்த நபர் பொது அமைப்பை சேர்ந்தவர் என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது அந்தக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவரான வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |