அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை
வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கடந்த 09-02-2025 கைது செய்யப்பட்ட14 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது
குறித்த வழக்கு நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலாவதாக ஒரு படகில் 11 கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர். இவர்கள் மீது ஐந்து குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துமீறி மீன்பிடியால் கிடைத்த தண்டனை
அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11கடற்றொழிலாளர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11கடற்றொழிலாளர்களுக்கும்50000ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்
குறித்த 11கடற்றொழிலாளர்களில் ஒருவர் படகு உரிமையாளராகவும், படகு ஓட்டியாகவும் காணப்படுவதால் படகு ஓட்டிக்கான தண்டனையாக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும், செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
படகு உரிமையாளருக்கான தண்டனை
அவர் படகின் உரிமையாளராகவும் காணப்படுவதால் அதற்காக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும், அதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
படகு உள்ளிட்ட கடற்றொழிலாளின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
மற்றைய படகில் 03 கடற்றொழிலாளர்கள் பிடிபட்ட வழக்கில் குறித்த அmவர்கள் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.
அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுருவி நுழைந்தமைக்காக 03 கடற்றொழிலாளர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
மீண்டும் தவறிழைப்பு
இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 03 கடற்றொழிலாளர்களுக்கும் 50000ரூபா குற்றம் பணம் தண்டம் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
குறித்த மூன்று இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்