திடீரென 35 பேருடன் கட்டுநாயக்க வந்த இந்திய விமானம்!
sri lanka
peopla
new deli
By Shalini
புதுடெல்லியில் இருந்து விமானம் ஒன்று 35 பேருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சின் விசேட அனுமதியுடன் இந்த விமானம் இலங்கை வந்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்