கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் சிக்கிய இந்திய பிரஜை
CID - Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
India
By Dilakshan
சுமார் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 75 கிராம் நிறையுடைய இரண்டு தங்க மாலைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது, விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (09) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தமிழ்நாட்டின் திருச்சியில் வசிக்கும் 36 வயதான வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
அத்தோடு, ஜவுளி மற்றும் தொலைபேசி உதிரி பாகங்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து இரண்டு தங்க மாலைகளையும் மறைத்து, தனது பயணப்பொதிகளையும் வைத்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி