இலங்கைக்கு வந்த இந்திய பிரஜைகளுக்கு எப்படி தொற்றியது கொரோனா
srilanka
india
corona
treatment
By Jaso
இலங்கைக்கு வருகை தந்த மூன்று இந்தியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது கெப்பிட்டிக்கொலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மாவட்ட மருத்துவ அதிகாரி வருணா கருணாரத்ன தெரிவித்தார்.
குறித்த மூன்று பேரும் இந்தியாவில் பி சி ஆர் பரிசோதனை செய்த நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழுடன் இலங்கைக்கு கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் 41,24, மற்றும் 27 வயதுடைய ஆண்களாவர்.இவர்கிடம் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் கடந்த மேமாதம் 6 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கான பயணத்தடையை அரசாங்கம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்