கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சயாத்ரி (INS Sahyadri) போர்க்கப்பல் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு (Colombo) துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
143 மீற்றர் நீளம் கொண்ட 320 பணியாளர்களைக் கொண்ட இந்த போர்க்கப்பல் நேற்று (04) நாட்டை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.
சுற்றுலா தலங்கள்
இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ் சயாத்ரி போர்க்கப்பல் தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் (07) நாட்டை விட்டு புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 11 மணி நேரம் முன்
