793 ரூபாவிற்கு பெட்ரோல் விற்பனை: உலகின் எட்டாவது நாடாக இலங்கை
சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (Lanka IOC) தனது பல கிளைகள் ஊடாக ஒக்டேன் 100 பெட்ரோல் இன்று முதல் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் XP100 இன் உத்தியோகபூர்வ அறிமுகம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு Ninewells LANKA IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் LIOC தலைவர் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, குறித்த வகை பெட்ரோலை விற்பனை செய்யும் உலகின் எட்டாவது நாடாக இலங்கை (Sri Lanka) மாறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விலை
அத்துடன், இந்த ஒக்டேன் 100 பெட்ரோல் நவீன வாகனங்களில் பயன்படுத்த உகந்தந்தது என்றும் அதனால் அதிக செயல்திறனை பெறமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வகை பெட்ரோல் ஒரு லீற்றர் இலங்கையில் 793 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |