குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விமானி: அமெரிக்காவில் கைது
குழந்தைகளை பாலியல் ரீதியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய இந்திய (India) வம்சாவளி விமானி ஒருவர் அமெரிக்காவில் (United States) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுகள்
டெல்டா போயிங் விமானம் மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியுள்ளது.
விமானம் நின்ற சிறிது நேரத்திலேயே, காவல்துறையினர் விமானி அறையில் நுழைந்து பகவாகரை கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடந்து வருகின்ற நிலையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - மாலை திருவிழா
