இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி

Colombo Anura Kumara Dissanayaka Sri Lanka Narendra Modi
By Thulsi Apr 04, 2025 02:40 AM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகிறார். 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது.

அத்துடன் இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர் வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் (Colombo) உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது .

யாழ். காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பாய்மரப் படகுகள்!

யாழ். காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பாய்மரப் படகுகள்!

இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி | Indian Pm Modi Visit To Srilanka Today

இதன்போது எரிசக்தி டிஜிட்டல் மயமாக்கல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக் கொள்ளப்பட உள்ளன.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள் ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5000 மெற்றிக் தொன் தம்புள்ளை களஞ்சிய வளாகத்தின் நிர்மாணம், 5000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்நிலை ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.

உல்லாச கப்பலில் சென்றவர்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவம்

உல்லாச கப்பலில் சென்றவர்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவம்

தொடருந்து பாதை திறப்பு

அதேபோல் இந்தியப் பிரதமர் அனுராதபுரம் மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ - அனுராதபுரம் தொடருந்து சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தொடருந்து பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி | Indian Pm Modi Visit To Srilanka Today

நாளை மறுதினம் பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்