ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையில் சிக்கிய இந்திய மாலுமிகள்: மத்திய அரசுக்கு பறந்த கோரிக்கை
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளை உடனடியாக பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது.
இந்த போரில் இருநாடுகளும் பரஸ்பர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சிக்கி தவிக்கும் மாலுமிகள்
பாதுகாப்பு காரணங்களால் ‘எம்.வி. அமீர் 1’ சரக்குக் கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 13 இந்தியர்கள் உட்பட 15 மாலுமிகள் உள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் மற்றும் கடல்சார் ஊழியர்களின் நலன்களுக்கான அமைப்பான எப்எஸ்யுஐ (FSUI) வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |