சிறிலங்கா கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் செயலாளர் ஜே.ஷா: ரணில் எடுத்துக்காட்டு
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Indian Cricket Team
World
By Dilakshan
a year ago

Dilakshan
in கிரிக்கெட்
Report
Report this article
சிறிலங்கா கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஷா கட்டுப்படுத்தவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அதிபர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரே இந்த நாட்டில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க சமீபத்தில் குற்றம்சாட்டினார்.
சர்ச்சைக்குரிய கருத்து
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் அந்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பலரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த கருத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறும் அதிபர் ரணில், இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் இவ்விவகாரம் குறித்து பேசியதாகவும் சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி