கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: டொராண்டோ பல்கலைக்கு அருகே பயங்கரம்
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஷிவாங்க் அவஸ்தி எனும் 20 வயது இளைஞரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மர்ம நபர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடா அதிகாரிகள், ஹைலாண்ட் கிரீக் பகுதியில் உள்ள பழைய கிங்ஸ்டன் சாலையில் ஒருவர் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதாகத் தகவல் கிடைத்ததாகவும் அதிகாரிகள் அங்குச் சென்ற போது துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் மாணவர் இறந்தநிலையில் கிடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தப்பியோடிய கொலையாளி குறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை கனடா அதிகாரிகள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |