உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உடன்படிக்கை
அத்தோடு, போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் முயற்சித்து வருகின்றார்.
இதனடிப்படையில், போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை நீண்ட இழுபறிக்குப்பின் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுன்கிறது.
உயர்மட்ட பேச்சுவார்த்தை
இந்தநிலையில், ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.

உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக ட்ரம்ப்பை விரைவில் சந்திக்க உள்ளேன்.
புத்தாண்டுக்கு முன் அதிக முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |