இலங்கைக்கு கடத்த முயன்ற புகையிலைகளை கைப்பற்றிய தமிழக காவல்துறையினர்
Sri Lanka
Tamil Nadu Police
India
Drugs
By Kathirpriya
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான புகையிலைகளை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோதே இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
ஒவ்வொன்றும் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் 1400 கிலோ புகையிலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன, புகையிலைகளை ஏற்றி வந்த வாகனம், தமிழக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனத்தில் இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார், இவ்வாறு கைப்பற்றப்பட்ட புகையிலை பண்டல்களைக் கடத்தும் நோக்கில் ஏற்றிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி