இலங்கைக்குள் நுழைந்த பயங்கரவாதி கைது!
இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டுவந்த சந்தேகநபர், இந்திய பாதுகாப்புப் படையினரையும், இந்திய நீதிமன்றங்களையும் தவிர்த்து வருகிறார்.
சந்தேக நபர் பங்களாதேஷிலிருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னர் வேறு நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து வர்த்தகர் போன்று தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்திய பாதுகாப்புப் படையினரும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய நீண்ட கால விசேட புலனாய்வு நடவடிக்கையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தி தொகுப்பில் காண்க
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்