குவைத் தீ விபத்து: சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களின் உடல்கள்
குவைத் (Kuwait) அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குவைத்தின் மங்காப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முன்தினம் (12) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்ததுடன் 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் (Tamil Nadu) சேர்ந்த ஏழு பேரும் கேரளாவைச் (Kerala) சேர்ந்த 26 பேரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை குவைத் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை
இந்நிலையில், இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற விமானம் நேற்று (13) குவைத்துக்குச் சென்றிருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
#WATCH | Ernakulam, Kerala: The mortal remains of 45 Indian victims in the fire incident in Kuwait being taken out of the special Indian Air Force aircraft at Cochin International Airport.
— ANI (@ANI) June 14, 2024
(Source: CIAL) pic.twitter.com/Dsn8hHhcqS
இதேவேளை, கொச்சியிலிருந்து (Kochi) உடல்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |