திருகோணமலை பொது வைத்தியசாலை சிசு மரணம்: நீதி கோரும் பெற்றோர்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த தமது சிசுவின் மரணத்தில் மர்மம் காணப்படுவதாகவும், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியக் கோரியும் சிசுவின் பெற்றோர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
திருகோணமலை துறைமுகப் காவல் நிலையத்தில் இன்று (13.05.2026) குறித்த முறைப்பாடு பதிவாகியுள்ளது.
சிசு உயிரிழந்தமை தொடர்பாக பல்வேறுபட்ட முரண்பாடான தகவல்கள் தமக்கு வழங்கப்படுவதாகப் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்றைய நவீன ட்ரோன் போரின் முன்னோடிகள் வான்புலிகள் : சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி புகழாரம்
சிசு உயிரிழந்ததற்கான காரணம்
இது குறித்து கருத்து வெளியிட்ட பெற்றோர்,

"எமது சிசு உயிரிழந்ததற்கான உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் தெளிவான காரணம் எமக்குத் தெரிய வேண்டும்.
இந்த மரணத்தில் எமக்குத் திருப்தியற்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. அதற்காகவே நாம் சட்ட ரீதியான நடவடிக்கையை நாடியுள்ளோம், என தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ள அதேவேளை சிசுவின் மரணம் மற்றும் வைத்தியசாலையின் அணுகுமுறை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளதாக்கவும் அவர்கள் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |