இலங்கைக்குள் ஊடுருவியது டெல்டா திரிபின் புதிய அலகு
sri lanka
delta
B. 1.617.2.104
By Vanan
இலங்கையில் மற்றுமொரு கொவிட் டெல்டா துணை வைரஸ் பரம்பரையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
B. 1.617.2.104 என்ற வகை வைரஸ் இனமே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பீ.1.617.2.28 என்ற டெல்டா உப வைரஸ் திரிபு நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும், தற்போது மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.