நீர்க்கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்
இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த நீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நீர்க் கட்டண சூத்திரம்
அத்துடன் நீர் கட்டண சூத்திரத்தில் உள்ள விடயங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்திருந்தார்.
நீர் சூத்திரம் மூலம் மக்கள் மீது மேலும் தேவையற்ற சுமையை திணிக்கவோ அதனை நடைமுறைப்படுத்தவோ தற்போது தாம் எதிர்பார்க்கவில்லை என கூறினார்
இந்த நிலையில் 2024 என்பது கொள்கைகளை உருவாக்கும் ஆண்டு எனவும் 2025 என்பது கொள்கை நடைமுறைப்படுத்தும் ஆண்டாகும். இருப்பினும், நீர்க் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |