பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்!
Vaccine
School
Exam
SriLanka
By Chanakyan
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாத முற்பகுதி முதல் தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் எதிர்வரும் 17 ஆம் திகதி கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலும், பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையிலும் குறித்த நடவடிக்கையினை விரைவாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.