இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
கொரோனா தொற்றை அடுத்து ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும்போது பொறுப்புடன் செயல்பட்ட மக்களுக்கு இராணுவ தளபதியும் கொவிட் ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) நன்றி தெரிவித்தார்.
மக்களின் நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா நிலைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
நாடு தற்போது திறக்கப்பட்டாலும் உத்தியோகபூர்வ அல்லது அவசர விடயங்களைத் தவிர வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், நாடு திறக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதை சுகாதாரத் துறை கண்காணித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena)குறிப்பிட்டார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் தொடரப்பட வேண்டுமா அல்லது தளர்த்தப்பட வேண்டுமா என்பது குறித்து இரண்டு வாரங்களில் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.