சீன கரிம உரம் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்ட தகவல்
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சீன கரிம உரம் பரிசோதனையில் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டுமொரு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ச்செய்கை விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே(Professor Buddhi Marambe) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு இரண்டுமுறை பரிசோதிக்கப்பட்டு அந்த உரம் தகுதியற்றது என தெரிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாகவும் பரிசோதனைக்கு உட்படுத்துவது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனமொன்றிற்கு அனுப்பி, அதனைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு இணங்குவதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்(Sashindra Rajapaksa)ஷ கொழும்பில் நேற்று (26) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை விவசாய அமைச்சில் பணியாற்றிய பேராசிரியர் புத்தி மாரம்பே சேதனப்பசளை திட்டத்தை விமர்சிப்பதாக தெரிவித்து அவரை விவசாய அமைச்சர் (Mahindananda Aluthgamage) நேற்றையதினம் பதவி நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.