கம்மன்பிலவின் கைது குறித்து நீதிமன்றுக்கு சென்ற அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், ஒரு மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை சட்டமா அதிபர் இன்று(24) நீதிமன்றத்திற்கு விடுத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்ட சார்பாக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தர்ஷன டி சில்வா, உதய கம்மன்பில கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கைது தொடர்பான முடிவு
ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு உதய கம்மன்பில இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், உதய கம்மன்பிலவைக் கைது செய்வதற்கு தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
