அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அர்ச்சுனா!
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதாகக் கூறி அரசாங்கம் ஒரு இனத்தை ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கும் அளவுக்கு தன்னை பிரபலமாக்குவதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களுடைய நாட்டிலே வடக்கு, கிழக்கு என்ற ஒரு பகுதி இருப்பதை தற்போதைய அரசாங்கம் மறந்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒற்றிமையின்மை
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ வடக்கு, கிழக்கு மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை விடயங்களை வழங்கி விட்டு பிச்சை போட்ட எண்ணத்தில் அரசாங்கம் திரிகிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒற்றிமையின்மையே இதற்கான காரணம். ஆகவே, எதிர்வரும் நாட்களில் தமிழ் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட தீர்மானித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
