மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்! சீனாவை உலுக்கத் தயாராகும் மிகப்பெரிய சூறாவளி
இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான சூறாவளியாகக் கருதப்படும் ரகசா சூறாவளி சீனாவை நோக்கி நகர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு நிலவரப்படி, குவாங்டாங் மாகாணத்தில் 1.89 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ரகசா இன்று எப்போதாவது மாகாணத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைவானில் ஏற்பட்டுள்ள அழிவு
தைவானை ஏற்கனவே கடுமையாகத் தாக்கிய ரகசா சூறாவளி காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 124 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் வெள்ளம் மற்றும் சூறாவளியால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் என்று கூறப்படுகிறது.
தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹுவாலியன் கவுண்டியில் உள்ள சில பகுதிகளில் 700 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது, அதே நேரத்தில் தெற்கு மற்றும் கிழக்கு நகரங்களில் 500-600 மிமீ மழை பெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
எச்சரிக்கை
இன்று (24) காலை நிலவரப்படி, தைவானின் தாயுவான் சர்வதேச விமான நிலையத்தில் 160 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் சில பகுதிகளில் தொடருந்து, சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
Image Credit: The New York Times
அதன்படி, ஹாங்கொங் வானிலை அதிகாரிகள், புயல் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 150 கிலோமீற்றர் தென்மேற்கே நகர்வதால் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கடும் காற்று குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை இன்று தொடர்ந்து மோசமாக இருக்கும் என்றும், அடிக்கடி கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சீன மக்களுக்கு எச்சரிக்கை மேலும் விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
