இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு
இஸ்ரேலின் (Israel) எரிக்கா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தள பதிவில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் நேற்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி
சீஷெல்ஸ் வழியாக இயக்கப்படும் இந்த விமானம் கொழும்பை அடைய சுமார் 9 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய நேற்று பயணமான விமானம் இன்று புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை முதன்மையாக இலக்காகக் கொண்ட இந்த விமானம் வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
