நாமலின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதி! மொட்டு தரப்பில் வெடித்த சர்ச்சை
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் தான் நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன் என குட்டியாராச்சி தெரிவித்தமையை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளி
ஆதரவாளர்களிடம் உரையாற்றிய திஸ்ஸ குட்டியாராச்சி, ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகத் தன்னைக் கருதுவதாகவும், 2029 இல் ஜனாதிபதி பதவியை வெல்வதற்கு ராஜபக்சவுக்கு ஏற்கனவே ஒரு அரசியல் அலை உருவாகி வருவதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அல்லது 2029 இல் அதிகாரத்தை இழப்பாரா என்பதை உறுதியாக கூறமுடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.
கட்சிக்கு தீங்கு
அதன்படி, நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும்போது, இலங்கையின் அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதியாக தான் பணியாற்றுவேன் என்று திஸ்ஸ குட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர, இதுபோன்ற அறிக்கைகள் கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
