அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளியிட்ட தகவல்!
இரத்தினபுரி மாவட்ட மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபா வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரியப்படுத்துவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்கொண்டுள்ள தொற்றுநோய் நிலைமை காரணமாக நாடு முடக்கப்பட்டிருப்பதால் இரத்தினபுரி மாவட்ட சிறிய மாணிக்கக்கல் வியாபாரிகளின் அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் அவர்கள் கஷ்டமான நிலைமைக்கு உள்ளாகியுள்ளதை பெருமளவான வர்த்தகர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன் அவர்களுக்காக ஏதாவது சலுகை நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய சிறிய மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு 25,000 ரூபாய் வட்டியில்லா கடன் ஒன்றை வழங்குவது பொருத்தமானது என கருதி, அரசாங்கத்துக்கு யோசனை ஒன்றை முன்வைத்திருப்பதாகவும் இந்த யோசனையை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, இந்த பிரேரணையை முன்வைத்திருக்கின்றேன். நியாயமான பதில் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்