உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முடிவடைய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா (G. Punchihewa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஏற்கனவே தயாராகி வருவதாக தேர்தல் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் , வாக்கெடுப்பு முறை மற்றும் அதன் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் அதற்கு தேவையான திருத்தங்களை முன்வைக்கவும் நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நான்கு மாதங்களுக்கு முன்னர் இருந்தே தயாராக வேண்டியது அவசியம்.
இதனடிப்படையில், எந்த மாற்றங்களும் இன்றி தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் எனவும் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு