எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
National Fuel Pass
By Jaso
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் வரை தேவைப்படும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்கள்
அமெரிக்காவில் இருந்து 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய ஒரு கப்பல் இந்த மாதம் 28 ஆம் திகதி, கொழும்புக்கு வரவுள்ளது.

மற்றொரு மசகு எண்ணெய் கப்பல், இந்த மாதம் 31 ஆம் திகதி, நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே மேலும் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன் : யாழ்.பல்கலை விரிவுரையாளர் குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 14 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி