யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம்
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் குழந்தையின் கைகால்களை திருகியதாக யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்து 45 நாளான குழந்தையானது தாய் பால் ஊட்டிய சில மணி நேரங்களுக்கு பின்னர் மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை
குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தையின் கை கால் முறிக்கப்பட்டிருந்த நிலையில் தலையில் தாக்கப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த சம்பவம்
இந்நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த வசாரணையின் போது குழந்தை பால் குடிக்க மறுப்பதால் கைகள் கால்களை திருகினேன் ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தயார் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, குழந்தையின் தந்தையையும் மற்றும் குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |