கனகராயன்குளத்தில் வனவள திணைக்களத்தின் அடாவடி : சத்தியலிங்கம் எம்.பி நேரில் ஆய்வு
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம், புளியங்குளம் ஆகிய பகுதியில் வனவள திணைக்களத்தினால் அடாவடியாக பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் எல்லையிடப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்தநிலையில், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம் மற்றும் அதனை அண்மித்த மன்னகுளம், பெரியகுளம், பழையவிளாங்குளம் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தார்.
ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர்
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விஜயத்தின்போது, வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளருமாகிய தவேந்திரராசா(அமலன்) ஆகியோரும் ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்