லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Raghav
களனி (Kelaniya) - மஹாபாகே (Mahabhake) காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (03) மாலை வெலிசர பொருளாதார நிலையத்திற்கு அருகில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
வத்தளை (Wattala) , பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வத்தளை , பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து குறித்த காவல்துறை அதிகாரி இலஞ்சமாக 25000 ரூபா பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட காவல்துறை பரிசோதகர் கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி