வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
Weather
People
Department of Meteorology
SriLanka
By Chanakyan
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில்,
இதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்